உத்தரப்பிரதேச மாநில பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அருகில் உள்ள ஷாபாய் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 26 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025