மண்ணெண்ணெய் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் உயிரிழப்பு.!

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஒரு சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கட்டக்புகூர் பஜார் பகுதியில் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் இருப்பு வைத்திருந்த மண்ணெண்ணெய் டிரம்ஸ் வெடிக்கத் தொடங்கியதால் தீப்பிழம்புகள் அருகிலுள்ள உணவு விடுதி மற்றும் வீட்டிற்கு பரவியுள்ளது.
அந்த உணவகத்தில் பாதி பகுதிக்கு தீ பரவியதும், கடையின் உரிமையாளர் மற்றும் அதில் பணிபுரிந்த 2 இளைஞர்களுடன் சேர்ந்து சில மதிப்புமிக்க பொருட்களைக் காப்பாற்றுவதற்காக கடைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் வெளியே வரமுடியவில்லை என்பதால் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஐந்து மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சில லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025