மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்! காரணம் இதுதானா?
மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆன் வான் டைக் சீட்டா மையத்திலிருந்து, மைசூர் பூங்காவிற்கு மூன்று சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் இரண்டு பெண் சிறுத்தைகள் மற்றும் ஒரு ஆண் சிறுத்தை ஆகும்.
இதுகுறித்து அப்பூங்காவின் இயக்குனர் அனில் குல்கர்னி அவர்கள் கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று சிறுத்தைகள், சிங்கப்பூர் வழியாக, இந்தியாவில் உள்ள மைசூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுத்தைகள் உள்ள பூங்காவில் இதுவும் ஒன்றாகும். தற்போது இந்த பூங்காவில் 5 சிறுத்தைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பூங்காக்களை பார்வையிட அரசு அனுமதி அழைத்தவுடன் இந்த சிறுத்தைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தற்போது உலக அளவில் 7,100 சிறுத்தைகள் உள்ளன என்றும், அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவில் உள்ளன.’ என்றும் தெரிவித்துள்ளார்.