ஜம்முவில் மீண்டும் 3 ட்ரோன்கள் பறந்ததால், தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள்.
ஜம்முவில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில் மூன்று இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முதல் ட்ரோன் கலுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், இரண்டாவது ரத்னுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், மூன்றாவது குஞ்ச்வானி பகுதியிலும் காணப்பட்டதாக கூறுகின்றனர்.இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் ஜம்முவின் சில பகுதிகளில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் ட்ரோன்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையின் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பு செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, திங்கட்கிழமை அன்று, அதிகாலையில் ரதனுசாக், கலஸாக் பகுதிகளில் ட்ரோன்கள் காணப்பட்டன. இதனையடுத்து அவற்றின் மீது இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…