கர்நாடகாவிற்கு 3 துணை முதல்வர்கள் நியமனம்

Default Image

கர்நாடகாவில் துணை முதலமைச்சராக கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன், லக்‌ஷ்மண் சங்கப்பா சாவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.  இதனையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா.

இந்த கர்நாடகாவிற்கு 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக துணை முதல்வர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்‌ஷமண் சங்கப்பா சவடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .அஷ்வத் நாராயணனுக்கு உயர்கல்வித்துறையும்,  லக்‌ஷமண் சங்கப்பாவிற்கு போக்குவரத்து துறையும், துணை முதல்வர் கோவிந்த் மக்தப்பா கரஜலுக்கு கூடுதலாக பொதுப்பணித்துறை, சமூகநலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்