காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை ; 144 தடை உத்தரவு !
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா பாதிப்பின் காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வயிற்றுப்போக்கு ,வாந்தி மற்றும் காலராவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் குடும்ப நலத்துறை இயக்குனரகம் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொதுஇடங்களில் அதிகபேர் ஒன்று கூடுவதால் நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பிருக்கு என்பதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறு உத்தரவு வருவரை இத்தடை அமலில் இருக்கும் என்றும் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.