3 நாட்களுக்கு இலவச டேட்டா, Unlimited Calls! வயநாடு வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்த ஏர்டெல்..!

Wayanad landslides airtel

வயநாடு நிலச்சரிவு :  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்று கொட்டும் மழையும் பொறுப்படத்தாமல் தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்ற காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, இலவச டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குவதாக அறிவித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா மற்றும்  அன்லிமிடெட் கால்,  100 எஸ்.எம்.எஸ் இலவசமாக வழங்கப்படும் எனவும், Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் கேரளாவில் உள்ள தனது 52 சில்லறை விற்பனைக் கடைகளையும் நிவாரண சேகரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது, அங்கு மக்கள் நிவாரணப் பொருட்களை கீழே இறக்கிவிடலாம், அவை வயநாட்டில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அனுப்ப உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஜியோ தகவல் தொடர்பு போக்குவரத்தின் எழுச்சியை நிர்வகிக்க அதன் நெட்வொர்க் திறனை மேம்படுத்தியுள்ளது.மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த நேரத்தில் நம்பகமான இணைப்புக்கான முக்கியமான தேவையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் கூடுதல் ஆதரவை வழங்க ஜியோ இரண்டாவது பிரத்யேக கோபுரத்தையும் நிறுவியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்