அந்தமான்-நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான நிலநடுக்கம்..!

அந்தமான்-நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை அந்தமான்-நிக்கோபாரில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.21 மணியளவில் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 9.12 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதன் பின்னர் 9.13 மணி அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும், இங்கு ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025
எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
March 21, 2025