சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா – சீனா இடையே தற்போது எல்லைப் பிரச்னை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி ‘டிக்டாக்’ உட்பட சீனாவைத் தலைமையிடமாக கொண்ட 100-க்கும் மேற்பட்ட செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது.
சமீபத்தில் இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சீன நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக குறைப்படுகிறது.
இந்நிலையில், உளவு பார்த்த சீன நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பியதாக பத்திரிகையாளர் ராஜூவ்சர்மா, சீனப் பெண் மற்றும் நேபாளத்தைச்சேர்ந்த அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுதிநேர (ஃப்ரீலான்ஸ்) பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா என்பவர் இரகசிய ஆவணங்களை உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக அவர் குறித்து டெல்லி காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததது. இதனால், ரகசியங்கள் சட்டத்தின் கீழ் டெல்லி போலீசாரால் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டார்.
மறுநாள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை ஆறு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளரான சர்மா பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர், டெல்லி காவல்துறை அவரது மடிக்கணினி, அவரது மொபைல் போன் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன், அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை அறிய அவரது அழைப்பு விவர பதிவுகளை ஸ்கேன் செய்து வருகிறார்கள் என்று டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.
“அவர் பாதுகாப்பு தொடர்பான சில வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அவர் எவ்வாறு வாங்கினார் என்பதையும், அதிகமான நபர்களின் ஈடுபாடு இருக்கிறதா..? என்பதையும் அவரிடம் விசாரிப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…