தீயணைப்பு கருவிகளை நிறம் மாற்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள் எனக் கூறி விற்பனை செய்த 3 பேர் கைது!

தீயணைக்கும் கருவிகளுக்கு கருப்பு வண்ணம் தீட்டி ஆக்சிஜன் சிலிண்டர் போல மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக டெல்லியில் உள்ள மூன்று நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒரு புறமிருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் பணம் படைத்தவர்கள் பலர் எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் ஆக்சிஜனை வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திய சிலர் டெல்லியில் தீயணைக்கும் கருவிகளை ஆக்சிஜன் சிலிண்டர்கள் போல உருவகப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய முகேஷ் கண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக தாங்கள் வழங்கிய வரக்கூடிய ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், தீயணைக்கும் கருவியை ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி ஷர்மா எனும் ஒருவர் தனக்கு ஐயாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஷர்மாவுக்கு மீண்டும் வேறொரு போல அழைத்து சிலிண்டருக்கு விலை கேட்டபொழுது 4.5 லிட்டர் கொண்ட சிலிண்டர் 13,000 என கூறியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அலிப்பூரில் உள்ள வர்ஷாவின் வீட்டை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு மூன்று பேர் சில எரிவாயு சிலிண்டர்களை கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டுவதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்த பொழுது தீயணைக்கும் சிலிண்டர்களின் சிவப்பு வண்ண பூச்சிகளை அகற்றி அதன் மீது கருப்பு வண்ணம் தீட்டி ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அதடுத்து குற்றம் சாட்டப்பட்ட ரவி ஷர்மா முகம்மது அப்துல், ஷம்பு ஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.