பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..! 3 பேர் கைது..!
டெல்லியில் பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.
கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க போலீஸ் உள்ளது. ஆனால், தற்பொழுது நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது.
அந்த வகையில், நேற்று டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் மக்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் பிசிஆர் ரோந்து வேன்கள் (PCR) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பிசிஆர் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
Delhi | 3 people have been arrested for allegedly attacking a PCR van and assaulting PCR staff in the Shastri Park area yesterday. The accused have been identified as Abdul Khalid, Md. Haseen and Phool Babu. Efforts are being made to identify and arrest the remaining accused: Joy… pic.twitter.com/KGn7ToON79
— ANI (@ANI) May 16, 2023
தற்பொழுது, இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்துல் காலித், எம்.டி. ஹசீன் மற்றும் பூல் பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.