பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. பதவியை ராஜினாமா செய்த சண்டிகர் மேயர்..!
சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியக் கூட்டணி இணைந்து எதிர்கொண்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு முன்பாக இந்திய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம் மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்கு அளித்தனர். இதில் இந்திய கூட்டணி கவுன்சிலர் அதிகம், இந்த மேயர் தேர்தலில் பாஜகவிற்கு 16 வாக்குகளும், இந்திய கூட்டணி 20 வாக்குகளும் கிடைத்தன.
ஆனால் இந்திய கூட்டணியில் வாக்களித்த கவுன்சிலர்களின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதனால் பாஜக வேட்பாளர்4 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக உள்ளதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டினர்.இதற்கிடையில் தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ திருத்துவது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது.
4-ம் கட்ட பேச்சுவார்த்தை….விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!
இதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது எனக் கூறிய மேயர் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களை முன்வைத்து வழக்கின் விசாரணை 19-ம் (இன்று) தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ள நிலையில், மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர். இது மட்டுமின்றி, சண்டிகர் மேயர் மனோஜ் சோங்கரும் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது, 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தாவி குதித்துள்ள நிலையில், பாஜக 18 வாக்குகளையும், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி 18 வாக்குகளையும் சிரோமணி அகாலிதளத்தின் உதவியுடன் பெறும்.
பாஜகவில் இணைந்த மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டு நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார்கள். பாஜகவில் 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தாவி குதித்துள்ள நிலையில் 36 உறுப்பினர்களைக் கொண்ட மேயர் தேர்தலில் பாஜக 19 வாக்குகளையும், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு 17 வாக்குகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.