3.7 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நிலநடுக்கம்!
3.7 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் இன்று காலை 8 . 19 மணி அளவில் குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 3.7 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் நீளம் 73.94 ஆகவும், அகலம் 36.55 ஆகவும் இருந்துள்ளது. குல்மார்க் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.