அசாமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! அதிர்ச்சியில் மக்கள்….
அசாமின் கம்ரூப்பில் 4:52 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாம்: கம்ரூப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய நகரமான கவுகாத்தி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்க அதிர்வு, கம்ரூப் மாவட்டத்தில் இன்று மாலை 4.52 மணிக்கு 10 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. இதனால், உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடகிழக்கு பகுதி அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது, இதனால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.