மும்பையில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு- மூன்று நாட்களில் நான்காவது முறை!
மும்பையில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மும்பையில் கடந்த சில தினங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மும்பையில் 3.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8 மணி அளவில் 102 கிலோமீட்டர் தூரத்தில் வடக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு அழுத்தமாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் எந்த ஒரு உயிரிழப்போ அல்லது சொத்து சேதங்களும் ஏற்படவில்லை என அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் வடக்கே 98 கிலோ மீட்டர் தூரத்தில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தேசிய மையத்தின் கணக்கின்படி இது 6:30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் இன்று மும்பையில் பதிவாகியது 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நான்காவது முறையாக ஏற்பட்டுள்ள நிலநடுக்கமாம்.