ஆன்லைனில் மூவி ரேட்டிங் என் கூறி 3.5 லட்சம் பறிபோன பரிதாபம்.!

Default Image

இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் மூவி ரேட்டிங் மற்றும் ரிவ்யூ களில் அதிக வருமானம் வருவதாக, ரூ.3.5 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.

மும்பையில் 33 வயதான பெண் ஒருவர், திரைப்படங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் விமர்சனம் செய்வதில் பெரிய வருமானம் சம்பாதிக்கலாம் என்று ரூ.3.56 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் ஒரு இணைப்பு வந்துள்ளது, அதில் அது படங்களுக்கு ரேட்டிங் செய்வதற்கு பணம் தருவதாக உறுதியளித்தது.

மேலும் இது வீட்டிலிருந்து பணி புரியும் வாய்ப்பு என்றும் இணைப்பை கிளிக் செய்யுமாறு வந்துள்ளது. அந்த இணைப்பில் கிளிக் செய்தவுடன் சுய விவரங்கள் கேட்கப்பட்டது. விவரங்களைப் பதிவேற்றிய பிறகு ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்டதால் அந்த பெண்ணும் ரூ.78,000 வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தார்.

அதன்பின் 30 ரேட்டிங் கொடுத்த பிறகு, போனஸ் மற்றும் கமிஷன் உட்பட ரூ.1.24 லட்சத்தை திரும்பப் பெற்றாள். இதனால் நம்பிக்கையடைந்த அந்த பெண், மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ரூ.3.56 லட்சத்தை முதலீடு செய்தார். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியாமல் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

ரூ.3.56 லட்சம் பணம் ஏமாற்றப்பட்டதும் அவர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார், போலிசார் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்