நாடு முழுவதும் ஒரே நாளில் 3.23 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் முன்பைவிட அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,636,307ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 2771 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 2,51,827 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 17,636,307 பேரில் இதுவரை 14,556,209 பேர் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தற்போது 28,82,204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நேற்று முன்தினம் 3.49 லட்சம், நேற்று 3.52 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 3.23 லட்சமாக சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 82.54%, உயிரிழப்பு விகிதம் 1.12% ஆக உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.