அசாமில் நள்ளிரவு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அசாமில் இன்று நள்ளிரவு 12.52 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
அசாமில் தென்மேற்கு பகுதியில் 40 கி.மீ தொலைவில் நள்ளிரவு 12.52 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.