மகாராஷ்டிரா பகுதியில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மகாராஷ்டிராவின் கொய்னா அணை அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் கொய்னா அணைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் மற்றும் பிற சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 10.22 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி கொய்னா அணையில் இருந்து 13.60 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது என்று சதாரா மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.