3 வது நாளாக வடமாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் நீடிப்பு!
3வது நாளாக விவசாயிகளின் போராட்டம் அமைதியாக நடைபெற்ற போதும், இதன் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் , ஹரியானா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களில் பத்து நாட்களுக்குத் தொடர் போராட்டங்களை 130 சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்தனர்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய சந்தை விலை கிடைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
காய்கறிகளை தரையில் கொட்டியும் பாலை தரையில் கொட்டியும் விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே விவசாயிகள் போராட்டத்தால் காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது.வடமாநிலங்களில் பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.