3 தீவிரவாதிகள் சுட்டு கொலை…இந்திய ராணுவம் அதிரடி…!!
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.இதில், பதுங்கி இருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற உள்ளது.காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் கிரால்ஹார் பகுதியில் போலீசாரை தாக்க முயன்ற 2 தீவிரவாதிகள் கடந்த 2 நாட்களுக்கு முன் சுட்டு கொல்லப்பட்டனர்.
DINASUVADU