கேரளாவில் 2-வது குரங்கு அம்மை தொற்று.. கண்காணிப்பு தீவிரம்.!

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவருக்கு Mpox பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Monkey Pox

கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சமீபத்திய அறிக்கை ஒண்றில், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் மேலும் ஒரு எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால், கேரளாவில்  தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவருக்கு Mpox பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த 38 வயது நபர், மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு Mpox பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அம்மாநில சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்