இந்தியாவில் 2வது பெரிய மெட்ரோ ரயில் ..!!
ஹைதராபாத் :
ஹைதராபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாவது பாகத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் துவங்கி வைத்துள்ளார். இதன்மூலம் டெல்லி மெட்ரோவை அடுத்து நாட்டின் 2வது பெரிய மெட்ரோ சேவையாக ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை மாறியுள்ளது. தற்போது துவங்கப்பட்டுள்ள அமீர்பேட் மற்றும் எல்.பி.நகர் ஆகியவற்றிற்கு இடையேயான 16கிலோமீட்டர் தூரம் கொண்ட 2வது பாகத்தோடு சேர்த்து மொத்தம் 29கிலோமீட்டருக்கு ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை இயக்கத்திற்கு வந்துள்ளது. மேலும், இரண்டு பாதைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக தெலுங்கானா நகராட்சி துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் கூறியுள்ளார்.
DINASUVADU