சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு விசாரணைக்கு கண்ணுக்குத் தெரியாத கரம் ஏதும் முட்டுக்கட்டை போடுகிறதா ?
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2ஜி தொடர்பான வழக்குகளின் விசாரணை நீண்டுகொண்டே செல்வதாக குறிப்பிட்டனர். இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் நாட்டு மக்களை அறியாமையில் வைத்திருக்க முடியாது என கூறிய நீதிபதிகள், 2ஜி மற்றும் அதுதொடர்பான வழக்குகளில் 2 வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கின் விசாரணைக்கு கண்ணுக்குத் தெரியாத கரம் ஏதும் முட்டுக்கட்டை போடுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 6 மாதத்திற்குள் விசாரணைகளை முடிக்க சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். 2ஜி வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக 2014ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆனந்த் குரோவரை, அப்பொறுப்பிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவித்தது.
மேலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை 2ஜி வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.