தலைநகர் டெல்லிக்கும் ஆக்ரா நகரத்திற்கும் இடைப்பட்ட எஸ்பிரஸ்வே என்னும் ஆறு வழிசாலையில் இன்று காலை பேருந்து ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதுல் பேருந்தில் பயணித்த பயணிகள் சுமார் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லி வரை வந்து கொண்டிருந்த பேருந்து 50 பயணிகள் வரை பயணித்தனர். பேருந்து இன்று காலை யமுனா எஸ்பிரஸ்வே என்னும் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து ஓட்டுநர் தூங்கியதால், சாலையில் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2012 ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சாலையில் இதுவரை 900 க்கும் மேற்பட்டோர் விபத்தால் உயிர் இழந்துள்ளனர்.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…