29% பேருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடிகள் உள்ளது..இரண்டாவது செரோ கணக்கெடுப்பு.!
29% பேருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடிகள் உள்ளன என்று இரண்டாவது செரோ கணக்கெடுப்பைக் காட்டுகிறது.
டெல்லியில் அண்மைய செரோ கணக்கெடுப்பில் 29.1 சதவீத மக்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் பேட்டிளித்த அவர், ஆகஸ்ட் 1-7 தேதிகளில் இங்குள்ள 11 மாவட்டங்களில் இருந்து 15,000 பிரதிநிதி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன மேலும் அடுத்த ஆய்வு செப்டம்பர் 1 முதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கணக்கெடுத்ததில் வடகிழக்கு மாவட்டத்தில் 29 சதவீதமும், தென் மாவட்டம் 27 சதவீதமும், தென்கிழக்கு 33 சதவீதமும், புதுடெல்லியில் 24 சதவீதமும் காணப்படுகின்றன.
முந்தைய கணக்கெடுப்பில் காணப்பட்டதை ஒப்பிடும்போது, பல்வேறு மாவட்டங்களில் மக்கள் மத்தியில் ஆன்டிபாடிகள் 6 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
ஆண்களில் காணப்படும் ஆன்டிபாடிகள் 28.3 சதவீதமாகவும், சமீபத்திய ஆய்வில் பெண்களில் 32.2 சதவீதமாகவும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.