இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் 28,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
- இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 28,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு.
- கருப்பு பூஞ்சை பதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளதாக தகவல்
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் அதிகளவிலான பாதிப்புகள் உருவாகியுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதுவரை இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துணி அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காணொலி கட்சி வாயிலாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 28,252 பேர் இதுவரை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், 62.3 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் கூறியுள்ளார். அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா உள்ளதாகவும், இரண்டாம் இடத்தில் குஜராத் உள்ளதாகவும் கூறியுள்ளார்.