கேரளாவில் கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்த 28 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

கேரளாவில் கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்த 28 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள பாடியூர் நகரைச் சேர்ந்த கே.பி. சுனில் என்பவர், கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 28.
இந்நிலையில், இவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். இது கேரளாவில் COVID-19 காரணமாக கொமொர்பிடிடிஸ் இல்லாத இறந்த முதல் நபர் ஆவார். சுனிலுக்கு நிமோனியா இருந்ததால், இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். சோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில், இவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025