8 வயது சிறுமியயை கொலை செய்த 28 வயது நபர் கைது …!
புனேயில் 8 வயது சிறுமியை கொலை செய்ததாக 26 வயது இளைஞர் பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது.
அப்போது யாரும் இல்லாத ஒரு விடுதியில் சடலமாக அந்த குழந்தை கண்டறியப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பாபில் அகமது ரயீஸ் லஷ்கர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் பிரசாந்த் அம்ருத்கர் கூறுகையில், சிறுமியயை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவில்லை.
ஆனால் உயிரிழந்த சிறுமி குற்றவாளிக்கு மிகவும் பழக்கமானவர் எனவும், பணத்திற்காக சிறுமியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் குற்றவாளிகளி இவர் தான் என்பதற்கு உறுதியான ஆதாரம் தங்களிடம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.