பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 28 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புடாவ்ன் எனும் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியிலுள்ள விடுதியில் 300 மாணவிகள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் இந்த பள்ளி விடுதியில் உள்ள உணவை சாப்பிட்ட 28 மாணவர்கள் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 8 மாணவர்கள் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு குமட்டல், வயிற்று வலி, தலை சுற்றல் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. உணவுடன் உருளைக்கிழங்கு மற்றும் சுரைக்காய் வழங்கப்பட்டதாகவும், உணவு சற்று கசப்பாக இருந்ததாகவும் பள்ளி மாணவிகள் வாடனிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள மாவட்ட அதிகாரி உணவு வழங்குவதற்கு முன்பதாக மூன்று பேர் கொண்ட குழு உணவை சுவைத்து பத்து நிமிடங்களுக்குப் பின்னர் தான் மாணவர்களுக்கு வழங்குவார்கள். ஆனால், அதன் முன்னதாக சாப்பிட்ட மாணவிகள் தான் உடல்நிலை சரியில்லை என புகார் செய்ததாக தெரிவித்துள்ளார்.