28% பேர் மாரடைப்பால் மரணம்! யாருக்கெல்லாம் இதய நோய் ஏற்படலாம்? – மத்திய அரசு தகவல்!

Default Image

நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2022-ல் 14.61 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தகவல்.

இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1990-ல் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை 15%-ஆக இருந்த நிலையில், 2023-ல் 28% ஆக அதிகரித்துள்ளது.

புகை பிடிப்போரில் 32.8% பேர், மது குடிப்போரில் 15.9% பேர், உடலுழைப்பு இல்லாதோரில் 41.3% பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.  போதிய காய்கறி, பலன்களை உணவில் சேர்க்காவிடில் 98.4% பேருக்கு இதய நோய் ஏற்படலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளது.

இதுபோன்று, போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களின் 41.3% பேருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் 2021-ல் 14.26 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2022-ல் 14.61 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்