இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின் சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது.
இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 28% ஆக உயர்த்துவதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு,வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இது தொடர்பாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறுகையில்:”கேசினோக்கள்,ரேஸ் கோர்ஸ்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தொடர்பான அமைச்சர்கள் குழு (GoM) ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது.எங்கள் சமர்ப்பிப்புகளின் அறிக்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.இது விளையாட்டு ஆர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…