2021 ல் காஷ்மீரில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்- காஷ்மீர் காவல்துறை..!
2021 ஆம் ஆண்டில் காஷ்மீரில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் ஐஜி விஜயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். 28 பேரில், ஐந்து பேர் உள்ளூர் இந்து/சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் உள்ளூர் அல்லாத இந்து தொழிலாளர்கள் என தெரிவித்தார்.
ஏராளமான பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாலும் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டதாலும், எல்லை தாண்டி பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மற்றும் போலீஸ்காரர்களை அவர்கள் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செயல்கள் புதிதாக சேர்க்கப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத வரிசையில் உள்ள நபர்களால் செய்யப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் காவல்துறை கடுமையாக உழைக்கிறது. இதுபோன்ற பகுதிநேர பயங்கரவாதிகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எங்களுக்கு பல தடயங்கள் கிடைத்துள்ளன.
நாங்கள் பாதுகாப்புப் படைகளுடன் நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம். பொது மக்கள், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் பீதி அடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். நாங்கள் அமைதி காக்கிறோம், அதை தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தார்.