டெல்லி மாநாட்டில் பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினர் கைது.!
டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற மத அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மாதம் 8 முதல் 20 வரை நடைபெற்றது. இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பதுங்கிருப்பதாக கூறப்பட்டது. இதனால் டெல்லி காவல்துறை அரசுடன் இணைந்து இன்று டெல்லி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் டெல்லி மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினரை போலீசார் அதிடியாக கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் இந்தோனேசியாவை சேர்ந்த 172 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 21 பேர் என 275 பேரை டெல்லி போலீஸ் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.