குஜராத்தில் ஆகஸ்ட்-25 முதல் ஒற்றுமை சிலையை பாதுகாக்க 272 CISF பணியாளர்கள் – மத்திய அமைச்சகம்
ஆகஸ்ட் -25 முதல் குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பாதுகாக்க 270 க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள்.
குஜராத்தில் உள்ள கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக 272 பணியாளர்களின் பலத்துடன் ஆகஸ்ட்-25 முதல் அனுப்பிவைக்கப்டும் .
சிஐஎஸ்எஃப் அணுப்பட்ட கடிதத்தில் குஜராத்தின் கெவடியா ஒற்றுமை சிலையில் சிஐஎஸ்எஃப் தகுதிவாய்ந்த அதிகாரத்தின் ஒப்புதல் தெரிவிக்கப்படுகிறது என்று டிஜி சிஐஎஸ்எஃப் ராஜேஷ் ரஞ்சனுக்கு அனுப்பப்பட்டுள்ளது இதனை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
அந்த வகையில் தேசிய தலைநகரில் உள்ள முக்கியமான அரசாங்க கட்டிடங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களையும் டெல்லி மெட்ரோவையும் சிஐஎஸ்எஃப் பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் செப்டம்பர் 2 முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் நுழைவதை மாநில அரசு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.