கொரோனா இரண்டாவது அலைக்கு இதுவரை 270 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்…..! – இந்திய மருத்துவ சங்கம்
இதுவரையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து 270 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பலர் தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இதுவரையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து 270 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளதாகவும், முதல் அலை பரவியபோது 748 மருத்துவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும் பிரபல மருத்துவரான கே.கே.அகர்வால் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து,ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறுகையில், இரண்டாவது அலை அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது. குறிப்பாக முன்னனியில் செயல்படும் முன் பணியாளர்களுக்கு’ என்று தெரிவித்துள்ளார்.