death [file image]
உத்தரபிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகரின் புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் சத்சங்கம் (கூட்டு வழிபாடு) நடந்து கொண்டிருந்தது. கூட்டு வழிபாடு முடிந்ததும், கூட்டம் இங்கிருந்து வெளியேறத் தொடங்கியவுடன், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50ஐ எட்டலாம் அஞ்சப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்து எட்டா மருத்துவக் கல்லூயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நெரிசல் ஏற்பட்டபோது, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தராவ் நகரில் ஒரு மத நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இதுவரை, 23 பெண்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் உட்பட 27 உடல்கள் எட்டா மருத்துவமனைக்கு வந்துள்ளன.
இந்த விபத்து பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 27 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…