இந்திய ரயில்வே சார்பில் ஜூலை 1- ம் தேதி ரயில்வே புதிய அட்டவணை மாற்றுவது வழக்கம். இந்த அட்டவணையில் மாற்றம் செய்ய “மிஷின் ரப்தார் “என்ற திட்டம் 2016-17 ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் சரக்கு ரயில்களின் வேகம் இரண்டு மடங்குகளாகவும், பயணிகள் பயணிக்கும் ரயில்களின் வேகம் 25 கி.மீ வேகமும் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் பல ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டது.மேலும் புதிய ரயில்களையும் அறிவித்து உள்ளனர்.
இந்த புதிய ரயில்வே அட்டவணையில் இந்திய ரயில்வேயில் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் 261 ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.இதனால் பயண நேரம் 1 மணிநேரம் 50 நிமிடம் குறையும்.மேலும் 49 ரயில்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரயில்வே அட்டவணையில் ஒரு வந்தே பாரத் மற்றும் உதே எக்ஸ்பிரஸ் ரயில்களும், 34 ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் , 11 அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்களும் , 2 தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…