பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளுகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டது. பெண் குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை தான் தற்பொழுது பல நாடுகளில் உருவாகியுள்ளது. இவ்வாறு குழந்தைகளிடம் கூட கொடூரமாக நடந்து கொள்ளும் மிருகங்களுக்கு தக்க தண்டனையையும் காவலர்கள் கொடுத்து வருகின்றனர். தற்பொழுதும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் காரார் எனும் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரக்கூடிய 15 வயது சிறுமியை 26 வயது இளைஞர் ஒருவர் அடிக்கடி கிண்டல் செய்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள குழந்தைகள் நல உதவி மையத்தின் இயக்குனர் டாக்டர் சங்கீதா அவர்கள் இந்த இளைஞன் சிறுமியை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகவும் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் வந்ததாகவும். எனவே அந்த இளைஞர் மீது ஐபிசி பிரிவு 354 ஏ இன் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…