மாமர இலையை பறித்தற்கு தாக்குதல், பின்னர் நடந்த சம்பவம்.!

Default Image

26 வயதான ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது, குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததற்காக சிலரால் தாக்கப்பட்டதில் வருத்தப்படுவதாகக் கூறினர். இதனால், நேற்று மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆஸ்தா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தாரம்பல் திவாகர் தற்கொலை செய்து கொண்டார்.

கிராமத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததாக அவர் சிலரால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீடு திரும்பிய பின்னர், திவாகர் தன்னை ஒரு அறையில் அடைத்து கொண்டு  தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்