இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 23 வெளிநாட்டவர்கள் எல்லையில் பிடிபட்டனர்!
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தது ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் தீவிரவாதிகளின் ஊடுருவல் பற்றிய செய்திகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர், லடாக், மேற்குவங்கம் போன்ற தரைவழி எல்லை பகுதிகளிளிலும், குஜராத், மும்பை, தமிழ்நாடு போன்ற கடல்வழி எல்லைகள் வழியாகவும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையில், வங்கதேசத்திலிருந்து 26 பேர் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர். இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது போல், மேற்கு வங்க மாநில எல்லையில் பலமுறை நிகழ்ந்துள்ளதாம். இந்த ஊடுருவல்கள் கால்நடைகள் மற்றும் பொருட்களை கடத்துவது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களாம். அதனால், தற்போது பிடிபட்ட 26 பேரிடம் இவர்கள் எதற்காக வந்தார்கள் இவர்கள் தீவிரவாதிகளா, இல்லை கடத்தல் கும்பலா என எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.