கோவா அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 26 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு மாநில அரசுகளும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து கோவாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதேபோல ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கோவாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த 26 கொரோனா நோயாளிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரி பேசுகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் இருந்து காலை 6 மணி வரையில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது உண்மை எனவும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும், சரியான நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உரிய இடங்களுக்கு போய் சேருவதில் ஏற்படும் பிரச்சினை காரணமாக தான் இந்த உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…