’26/11 மறக்குமா நெஞ்சம்’.. இந்தியாவை அதிர வைத்த தாஜ் ஹோட்டல் அட்டாக் நடந்த தினம் இன்று!
மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 16 வருடங்கள் முடிந்துவிட்டது.
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை இப்போதும் உலகம் 911 என்று நினைவு கூறுகிறது. ஆனால், அதை விட கொடூரமான ஒரு தாக்குதல் தான் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் தான். ட்வின் டவர் தாக்குதலை எப்படி 911 என பேசுகிறார்களோ அதே போல இந்த மும்பை தாக்குதலையும் 26/11 என 16 ஆண்டுகள் கடந்தும் பேசுகிறார்கள்.
மறக்க முடியாத 26/11 :
லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் மும்பை கடல் வழியாக, மீனவர்களை கொன்றுவிட்டு, அப்படகுகளைத் திருடி மும்பைக்கு வந்தனர். இந்த தீவிரவாதிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து நவம்பர் 26ம் தேதி அன்று மாலை தங்கள் ஆப்ரேஷனுக்காக களமிறங்கினர்.
அதனைத் தொடர்ந்து, மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இவர்கள் தங்களது முதல் தாக்குதலை நடத்தினார்கள். இந்த கொடூரத் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்ததுடன், 120 பேர் படுகாயம் அடைந்தனர். அஜ்மல் கசாப் எனும் பயங்கரவாதி வழிநடத்திய இந்த தாக்குதலை 3 தீவிரவாதிகள் நடத்தினார்கள்.
இந்த தாக்குதல் நடந்ததை தொடர்ந்த அடுத்த இரண்டு நிமிடத்திலேயே மும்பையில் முக்கியமான இடங்களில் ஒன்றான வெளிநாட்டவர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25 பேர் வரை உயிரிழந்தனர். இதில், உயிரிழந்தவர்களில் இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் தாக்குதல் …
அதனைத் தொடர்ந்து, சிறுதும் இடைவேளையின்றி, வெளிநாட்டினர் வசிக்கும் பெரிய ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினர்கள். அதில், குறிப்பாக தாஜ் ஹோட்டல் , ஓரியண்ட் ஹோட்டல் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தீவிரவாத எதிர்ப்பு படை ஸ்பெஷலிஸ்ட் ஹேமன்த் கார்கரே உள்ளிட்ட முக்கிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல்கள் அதன்பிறகு இந்தியாவிற்கு தலைவலியாக மாறியது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள்ளே நூற்றுக்கணக்கான பிணைக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். அந்த கைதிகளில் பலரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து 3 நாட்களாக, அதனுள் இருக்கும் மக்களைக் காக்கவும், உள்ளிருக்கும் தீவிரவாதிகளை சுட்டுக் கொள்ளவும் என பாதுகாப்பு படை வீரர்கள் போராடினார்கள்.
3 நாட்கள் நீடித்த போராட்டம் …
மேலும், வெளிநாட்டவர்களும் ஹோட்டலில் பிணைக்கைதிகளாக இருக்கையில் உலகம் முழுவதும் இந்த செய்தி தலைப்பு செய்தியாக உருவெடுத்தது. மேலும், இந்திய இறையாண்மைக்கு இந்த தாக்குதல் மிக பெரிய பிரச்சினையாக மாறியது. தீவிரவாதிகளை கூண்டோடு எப்படி பிடிப்பது என்று தெரியாமல் தீவிரவாத எதிர்ப்புப்படை கஷ்டப்பட்டு வந்தது.
இந்த தாக்குதல் நவம்பர் 29ம் தேதி அதாவது 3 நாட்களாக நடந்தது. இந்திய பாதுகாப்பு படை தொடர்ந்து தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதலை தொடர்ந்ததன் காரணமாக ஹோட்டல்குள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்தனர்.
இறுதியில், பாதுகாப்பு படைவீரர்களின் எதிரிவினை தாக்குதலின் முடிவில் தீவிரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் இதில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 160 பேர் உயிரிழந்தனர் மேலும் 450-க்கும் மேற்பட்டோர் தீவிர படுகாயம் அடைந்து மீண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 வருடங்கள் …
இந்த மோசமான சம்பவம் நடந்து 16 வருடங்கள் நிறைவடைந்தாலும், இன்று வரை இந்த நாள் இந்தியாவிற்கு ஒரு வலி நிறைந்த நாளாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை கடக்கும் போது, அதனை மறக்க வேண்டுமென நினைத்தாலும் இந்த நிகழ்வை நினைவக் கூறாமல் கடப்பது என்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது.