லட்சுமி மிட்டல் 2.5 கோடி டாலர் நன்கொடை : ஹார்வேர்ட் பல்கலை கழகம்
பிரபல உருக்குத்துறை தொழிலதிபரான லட்சுமி மிட்டல், 2.5 கோடி டாலர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
தெற்காசிய மையத்தின் ஒரு நிதியத்தை ஏற்படுத்த இது உதவும் இந்தியா உட்பட ஆப்கானிஸ்தான், வகதேசம், பூடான், மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவதற்காக இந்த மையம் செயல்படுகிறது.
இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹார்வேர்ட் பல்கலையில் உள்ள இந்த மையம் இனி லட்சுமி மிட்டல் தெற்காசிய மையம் என்று அழைக்கப்படும். இந்த மையம் 2௦௦3-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது .