சத்தீஸ்கரில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தி செல்லப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை சோதனையிட்ட போது, ரகசிய அறை அமைத்து 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக, சத்தீஸ்கரில் இருந்து எரிசாராயத்தை கடத்திச்சென்றதும் தெரியவந்தது.
டேங்கர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…