சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு..!!
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-சீன எல்லை அருகேயுள்ள நதுலா என்ற இடத்திற்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள், அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த அங்கு விரைந்த ராணுவ வீரர்கள், பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.