கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை காட்டிக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.
கேரளாவில் குப்பையில்லா மாநிலமாக மற்றும் நடவடிக்கையில், அரசு இறங்கியுள்ளது. பொதுமக்கள் சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில், அதிகளவில் குப்பைகளைக் கொட்டும் செயல் அதிகரித்துள்ளதால் கேரள அரசு ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதாவது பொது இடங்களில் யாராவது குப்பை கொட்டுவதை மக்கள் பார்த்து அவர்கள் மீது புகார் அளித்தால் அவர்களுக்கு அரசு சன்மானமாக ரூ.2,500 வழங்கும் என அறிவித்துள்ளது. மாலினிய முக்தம் நவகேரளம என்ற திட்டத்தின் பகுதியாக மாநிலத்தை குப்பையில்லாமல் மாற்ற அரசு இந்த செயலில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சாரதா முரளீதரன் பிறப்பித்த உத்தரவில், பொது இடங்கள், தனியார் இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் திட மற்றும் திரவக் கழிவுகளை கொட்டுவதை பார்த்தால் மக்கள் புகார் அளிக்கவேண்டும்.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் நபருக்கு ரூ.2,500 அல்லது விதிக்கப்படும் அபராதத்தில் 25 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்களுடன் நம்பகமான புகைப்படம் அல்லது வீடியோ கிளிப் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் புகாரளிக்க வேண்டும் என்றும், தகவல் அளிப்பவரின் பெயர் அல்லது விவரங்களை அதிகாரிகள் வெளியிட மாட்டார்கள் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…