மேலும் 250 ஊழியர்கள் பணிநீக்கம் – மீஷோ நிறுவனம் அதிரடி.!
மீஷோ நிறுவனம் மூன்றாவது முறையாக 250 ஊழியர்களை பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலகளவில் இ-காமர்ஸ் தளங்களான அமேசான், மெட்டா, கூகுள் மற்றும் ட்விட்டர் போன்ற பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள தங்களது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அவ்வப்போது அறிவிப்பு வெளியான வண்ணமே உள்ளது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்தியாவில் புதியதாக தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் தளமான மீஷோ (Meesho) நிறுவனம், பொருளாதாரச் சூழலின் காரணமாக மூன்றாவது முறையாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆம், இதனால் இந்நிறுவனத்திலிருந்து 15 சதவீத பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதாவது, சுமார் 250 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்னர். ஏற்கனேவே, ஏப்ரல் 2022-ல், மீஷோ 150 ஊழியர்களை நீக்கியது, அதனை தொடர்ந்து ஆகஸ்டில் மேலும் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
பல இந்திய நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன்படி, Zomato நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. எட்-டெக் ஸ்டார்ட்அப் அனாகாடமி 600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.