4 ஆண்களால் ஹரியானாமாநிலத்தில் உள்ள குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ள குர்கான் டிஎல்எப் எனும் கட்டிடத்தின் 2-வது மாடியில் 25 வயதுடைய பெண்ணொருவர் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த நான்கு ஆண்களுமே 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக தான் இருப்பதாக உதவி போலீஸ் கமிஷனர் கரண் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் 4 பேரில் 3 பேர் டெலிவரி செய்ய கூடிய சிறு வயது உடையவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் தான் சனிக்கிழமை இரவு மெட்ரோ ரயில் நிலையம் அருகே அந்த பெண்ணை சந்தித்து ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு அழைத்து சென்றதாகவும், அதன் பின் தனது நண்பர்களை வரவழைத்து இவ்வாறான குற்றத்தை நடத்தி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்று வருகிறது. மேலும் அப்பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…