மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் 25% குறைப்பு.!
கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா அரசு 2020-21 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளது. அம்மாநிலத்தில் 1 -ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாநில கல்வித் திருத்தம் மற்றும் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு அனுப்பிய கடிதத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் (Varsha Gaikwad) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்ததன் மூலம் இந்தசெய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த ட்வீட்டில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2020-21 கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 25 சதவீதக் குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைத்த ஒரே மாநிலம் மகாராஷ்டிரா அல்ல. இதற்கு முன் 2020-2021 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களையும் ஹரியானா குறைத்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீதான மன அழுத்தத்தைக் குறைக்க ஹரியானா அரசு இதை செய்ததது என கூறப்படுகிறது.
राज्य में कोविड 19(कोरोना वायरस) के मद्देनजर राज्य शिक्षा संशोधन एवं प्रशिक्षण परिषद ने शैक्षणिक सत्र 2020-21 के कक्षा 1 से 12 वी तक के पाठक्रम में २५ प्रतिशत कटौती का प्रस्ताव रखा था । राज्य सरकार ने इस प्रस्ताव को अनुमति दी है ।@CMOMaharashtra @bb_thorat @AjitPawarSpeaks pic.twitter.com/kdqJkL3i35
— Varsha Gaikwad (@VarshaEGaikwad) July 25, 2020
மேலும், சிபிஎஸ்இ இந்த கல்வியாண்டிற்கான 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களையும் குறைத்தது. கொரோனா நோயை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ வாரியத்தின் பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. குஜராத்தும் பாடத்திட்டத்தை திருத்தியதுடன், இந்த ஆண்டு 9 முதல் 12 பாடத்திட்டங்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.